உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசிரியர்களுக்கு பயன்படாத கோவை ஆசிரியர் இல்லம்; அறை மறுக்கப்படுவதாக புகார்

ஆசிரியர்களுக்கு பயன்படாத கோவை ஆசிரியர் இல்லம்; அறை மறுக்கப்படுவதாக புகார்

கோவை; கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்படும் ஆசிரியர் இல்லத்தில், ஒரு ஆசிரியருக்கு அறை வழங்க மறுக்கப்பட்ட சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பணி நிமித்தமாக கோவைக்கு வரும் ஆசிரியர்கள், குறைந்த கட்டணமாக ரூ.100 செலுத்தி தங்க, இந்த ஆசிரியர் இல்லம் பயன்படுகிறது.2020ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த இல்லத்தில், மூன்று தளங்களுடன், இரண்டு படுக்கை வசதி கொண்ட, 15 அறைகள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்காக மூன்று அறைகள் என, மொத்தம் 18 அறைகள் உள்ளன.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், தேனியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், பணி நிமித்தமாக கோவைக்கு வந்தபோது, இவ்வசதியைப் பயன்படுத்த அனுமதி கோரினார். ஆனால், பொறுப்பாளராக உள்ளவர், “டாய்லெட்டை சுத்தம் செய்ய ஆள் இல்லை; பெருக்கி எடுக்கவும், துணி துவைக்கவும் ஆள் இல்லை. தண்ணீர் வராவிட்டால் என்னைத் தொடர்புகொள்ளக் கூடாது. பாதுகாவலர் இல்லை. பொருட்கள் திருடப்பட்டால் நான் பொறுப்பல்ல' என அலட்சியமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இங்கு தங்குவதற்காக, அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், சிலர் புகார் தெரிவிக்கின்றனர்.பொறுப்பாளர் ஸ்டாலின் கூறுகையில், “ஆசிரியர்களின் அடையாள அட்டையை சரிபார்த்த பின்னர் மட்டுமே, அறைகள் ஒதுக்கப்படுகின்றன. பொதுவாக, மூன்று நாட்கள் மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படுகிறது,'' என்றார்.இது தொடர்பாக, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்டதற்கு, “அறை மறுக்கப்பட்டதாக புகார் வந்ததும், உடனடியாக சம்பந்தப்பட்ட பொறுப்பாளரிடம் விசாரணை மேற்கொண்டோம். தற்போது, அங்கு ஒரு தூய்மை பணியாளர் பணியில் இருக்கிறார். இனி இவ்வகை புகார்கள் எழாமல் இருக்க, தேவையான அறிவுறுத்தல்கள்வழங்கப்பட்டுள்ளன,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி