உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாரா வாலிபால் போட்டியில் கோவை அணி முதலிடம்

 பாரா வாலிபால் போட்டியில் கோவை அணி முதலிடம்

கோவை: பாரா வாலிபால் அசோசியேஷன் ஆப் கோயமுத்துார் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாலிபால் போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரேயுள்ள மைதானத்தில் நடந்தது. இப்போட்டிகளில், மாநிலம் முழுக்க, 12 அணிகள் பங்கேற்றன. இறுதி சுற்றில், 25-17, 25-10 என்ற கணக்கில், கோவை அணி முதல் பரிசும், கன்னியாகுமரி அணி இரண்டாம் பரிசும் வென்றது. மூன்றாவதாக கிருஷ்ணகிரி அணி இடம்பெற்றது. போட்டியில், ஐந்து பிரிவுகளில், சிறந்த வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. அதன்படி, சிறந்த அட்டாக்கர் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆஷிப், மேன் ஆப் தி சீரிஸ் கோவையை சேர்ந்த சுதாகர், சிறந்த ஆல் ரவுண்டர் கன்னியாகுமரியை சேர்ந்த தினேஷ், சிறந்த செட்டர் கோவையை சேர்ந்த பழனிசாமி மற்றும் சிறந்த டிபண்டர் வேலுாரை சேர்ந்த ஹரி என்பவருக்கு வழங்கப்பட்டது. முன்னதாக, மேயர் ரங்கநாயகி போட்டியை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ