எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு
கோவை : கோவை மாவட்டத்தில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபார தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன. புதிதாக நிறுவனங்கள் துவங்க, பழைய நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய, நடைமூலதனத்துக்காக நிதி தேவை இருக்கிறது.தமிழக அரசு அறிவுறுத்தலின் படி, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பயனடைய அனைத்து வங்கிகள் சார்பிலும் கடன் வசதி முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், 15ம் தேதி காலை, 10:00 மணி முதல், கொடிசியா 'டி' அரங்கில் முகாம் நடக்க உள்ளது. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பங்கேற்று பயனடைய, கலெக்டர் கிராந்திகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.