உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரியில்  கம்யூனிக்  2025

கல்லுாரியில்  கம்யூனிக்  2025

கோவை; கோவை டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லுாரியின் தொடர்பியல் துறை சார்பில், 'கம்யூனிக் 2025' துவக்க விழா, கல்லுாரியின் 'சார்ல்ஸ் பாபேஜ்' அரங்கில் நேற்று நடந்தது. கல்லுாரி தாளாளர் பத்மநாபன், செயலாளர் கீதா பத்மநாபன், முதல்வர் சாந்தா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக, 'யூடியூப் சேனல்' ஆர்டிஸ்ட் நிவேதிதா ராஜப்பன், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் வணிகத் திட்டமிடல் - டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர் அருண் பீமா ஆகியோர் பங்கேற்றனர். முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக, இந்நிகழ்வு நடத்தப்பட்டதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ