மேலும் செய்திகள்
உயர்கல்வி வழிகாட்டுதல் முன்னேற்பாடு கூட்டம்
07-May-2025
கோவை : பிளஸ்2க்கு பின் என்ன படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்துவது குறித்து கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.பிளஸ் 2 படிப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் கல்லூரி கனவு - 2025 நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் இணையலாம். அதற்காக பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளும் பொருட்டு கல்லுாரி கனவு -2025 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.அதன்படி, கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, பொள்ளாச்சி, என்.ஜி.எம்.கல்லுாரி, காரமடை ஆர்.வி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஈச்சனாரி, கற்பகம் கல்லுாரி, உக்கடம் பெரியகுளம், மாநகராட்சி பயிற்சி மையத்திலும் கல்லுாரி கனவு நிகழ்ச்சி விரைவில் நடக்க உள்ளது.இந்நிகழ்ச்சியில் வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் குறித்தும், நான் முதல்வன் திட்டம் பற்றியும், கல்விக்கடன் சார்ந்த விபரங்களையும் கூறுவர்.மேலும் வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுகள் குறித்த விபரங்களையும் வழங்குவர். கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
07-May-2025