கல்லுாரிகள் ஹேண்ட்பால் நிர்மலா அணி சாம்பியன்
கோவை; கல்லுாரிகளுக்கு இடையேயான ஹேண்ட்பால் போட்டியில், நிர்மலா மகளிர் கல்லுாரி அணி அதிக வெற்றி புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே பெண்களுக்கான ஹேண்ட்பால் போட்டி, நிர்மலா மகளிர் கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தது. இதில், 10 கல்லுாரி அணிகள் பங்கேற்ற நிலையில், 'நாக்-அவுட்' போட்டிகளை அடுத்து 'லீக்' முறையில் அணிகள் விளையாடின.முதல் போட்டியில், பாரதியார் பல்கலை அணி, 19-14 என்ற புள்ளிக்கணக்கில் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியை வென்றது. நிர்மலா மகளிர் கல்லுாரி அணி, 37-7 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரியையும், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணி, 17-14 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி., கல்லுாரியையும் வென்றன.நிர்மலா கல்லுாரி அணி, 37-6 என்ற புள்ளிகளில் பாரதியார் பல்கலை அணியையும், பாரதியார் பல்கலை அணி, 14-11 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணியையும், நிர்மலா மகளிர் கல்லுாரி அணி, 29-6 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியையும் வென்றன.முதலிடத்தை நிர்மலா மகளிர் கல்லுாரி, இரண்டாம் இடத்தை பாரதியார் பல்கலை, மூன்றாம் இடத்தை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி, நான்காம் இடத்தை பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியும் வென்றன.வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி செயலாளர் குழந்தை தெரஸ், முதல்வர் மேரி பபியோலா பரிசுகள் வழங்கினர்.