மேலும் செய்திகள்
அண்ணா நகரில் அவதி
25-Feb-2025
வால்பாறை: வால்பாறை அண்ணாநகர் பகுதியில், வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளவில்லை என, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.வால்பாறை அண்ணாநகர் பொதுமக்கள், நகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ள அண்ணாநகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த, 50 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். இங்கு வசிக்கும் மக்கள் அனைவருமே, எஸ்டேட்களில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.கூலி வேலை செய்தாலும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை தவறாமல் செலுத்தி வருகிறோம். ஆனால், சமீப காலமாக அண்ணாநகர் பகுதியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்வதில்லை. மேலும் நடைபாதை, தெருவிளக்கு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் நகராட்சி சார்பில் செய்துதரப்படவில்லை.நகராட்சி நிர்வாகம், அண்ணாநகர் பகுதியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அண்ணாநகர் பகுதியை கமிஷனர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
25-Feb-2025