உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  டைமிங் குறித்த அறிவிப்பு பலகை இல்லாமல் அவதிப்படும் பயணியர்

 டைமிங் குறித்த அறிவிப்பு பலகை இல்லாமல் அவதிப்படும் பயணியர்

வால்பாறை: வால்பாறை பஸ் ஸ்டாண்டில் நேர அறிவிப்பு பலகை இல்லாததால் பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், சேலம், மன்னார்காடு, பழநி உள்ளிட்ட வெளியூர்களுக்கு, 19 பஸ்களும்; எஸ்டேட் பகுதிகளுக்கு, 19 பஸ்களும் இயக்கப்படுகின்றன. வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு காந்திசிலையிலிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் பஸ் புறப்படும் நேர அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. இதனால் பயணியர் அவதிக் குள்ளாகி வருகின்றனர். பயணியர் கூறியதாவது: வால்பாறை காந்திசிலை வளாகத்தில் இருந்து எஸ்டேட் பகுதிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. 'டைம் கீப்பர்' அறை மட்டும் உள்ளது. ஆனால் அங்கு பஸ் புறப்படும் நேரம் குறித்து அறிவிப்பு பலகை இல்லை. இதனால், எந்த எஸ்டேட்க்கு எந்த நேரத்தில் பஸ் இயக்கப்படும் என தெரியாமல் பயணியர் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் உடனடியாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பஸ்களின் 'டைமிங்' தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பஸ்களும் இயக்கப்படும் நேரம் குறித்து முடிவு செய்த பின், காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி