கம்பனை போற்றுதல் சொற்பொழிவு நிகழ்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கம்பன் கலை மன்றத்தின், 371வது நிகழ்ச்சியாக, 'கம்பனை போற்றுதல்' என்ற தலைப்பில் சொற்பொழிவு லயன்ஸ் கிளப் கூட்ட அரங்கில் நடந்தது. பெத்தநாயக்கனுார் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மன்றத்தின் துணைத்தலைவர் செல்வராஜ் வரவேற்றார். 'கவிகள் போற்றும் மகாகவி' என்ற தலைப்பில், உடுமலையைச் சேர்ந்த புலவர் சுபாஷ் சந்திரபோஸ் பேசினார். கேரளா மாநிலம், சித்துார் அரசு கலை கல்லுாரியின் தமிழ் பேராசிரியர் முனைவர் சிவமணி, கம்பனையும், திருவள்ளுவரையும் ஒப்பிட்டு திருக்குறள் நெறிகள், கம்பராமாயணத்தில் எவ்வாறு காட்டப்பட்டுள்ளன என விளக்கினார். ஓய்வு பெற்ற விமான படை அலுவலர் பிராங்களின், ராணுவப்படை அலுவலர் குமரன், கப்பற்படை அலுவலர் துரைசாமி என, முப்படை வீரர்களுக்கு நினைவுப்பரிசு, தேசியக்கொடி வழங்கி மரியாதை செய்யப்பட்டன. மன்றத்தின் துணைத்தலைவர் கவிஞர் ரமேஷ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மன்றத்தலைவர் சண்முகம், செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் செய்திருந்தனர்.