உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்து மாற்றம் எதிர்த்து மக்கள் நீதிமன்றத்தில் புகார்

போக்குவரத்து மாற்றம் எதிர்த்து மக்கள் நீதிமன்றத்தில் புகார்

கோவை : கோவை கோர்ட் வளாகம் அருகில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக, நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கோவையை சேர்ந்த வக்கீல் ஆர்.பி.ராஜாமணி என்பவர், கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் அளித்துள்ள புகார் மனு:கோவை மாநகர போக்குவரத்து போலீசார், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில், எந்த முன்அறிவிப்பும் இன்றி, சாலையை மாற்றி அமைத்துள்ளனர். இதனால், கோர்ட் அருகில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தினந்தோறும் கோர்ட்டிற்கு வரும் வக்கீல்கள், நீதிபதிகள், பொதுமக்கள், கோர்ட் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோவை மாநகர பகுதிகளில், சிக்னலில் நிற்காமல் செல்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பழையபடி சிக்னலில் நின்று செல்லும் முறையை, அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை, விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி நாராயணன், வழக்கை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இது தொடர்பாக பதில் அளிக்க, மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர், மாவட்ட சாலை பாதுகாப்பு அலுவலர், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ