உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி ஸ்வீட், காரம் குறித்த புகார்கள் இருந்தால் செயலியில் புகார் செய்யலாம்

தீபாவளி ஸ்வீட், காரம் குறித்த புகார்கள் இருந்தால் செயலியில் புகார் செய்யலாம்

கோவை : தீபாவளிக்கு விற்பனை செய்யப்படும், ஸ்வீட், காரம் உள்ளிட்டவை தொடர்பான புகார்களுக்கு, உணவுப்பாதுகாப்பு துறையின் செயலியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தீபாவளிப்பண்டிகை, வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இனிப்பகங்கள் தவிர, தீபாவளி சீட்டு நடத்துவோர், தற்காலிக இனிப்பகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், உணவுப்பாதுகாப்பு துறை சார்பில், தீபாவளி இனிப்புகள், கார வகைகள் தயாரிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், தீபாவளி இனிப்பு வகைகளில் குறைகள் கண்டறிந்தால், புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், ''புகார் தெரிவிக்க துறை சார்பில், 'tnfoodsafety consumer' என்ற செயலி உள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து புகார் தெரிவிக்கலாம்.பண்டிகை காலங்களில், இனிப்பு, காரம் வாங்கும் போது அவற்றில் விபரச்சீட்டு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். கடைகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் காலாவதி, தயாரிப்பு தேதி உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டும். புகார்களை தெரிவிக்க தயங்கக்கூடாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ