உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கான்கிரியேட் 1.0 கட்டட கண்காட்சி

கான்கிரியேட் 1.0 கட்டட கண்காட்சி

கோவை; வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கட்டுமானம் மற்றும் கட்டடக்கலை அறிவியலைக் கொண்டாடும் வகையில், 'கான்கிரியேட் 1.0' கண்காட்சி நடந்தது.வெவ்வேறு வகை கட்டுமான மினியேச்சர்களை, மாணவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். விரிவான மினியேச்சர் மாடல்கள், பீம் மாடல்கள், ஸ்லாப், நெடுவரிசைகள், ஆர்.சி.சி., கட்டமைப்புகள், சிலோஸ், தக்கவைக்கும் சுவர்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.கான்கிரியேட் 1.0 கண்காட்சி, மாணவர்களை மாதிரி தயாரித்தல் வாயிலாக, கற்றலுக்கு ஊக்குவிப்பதுடன், அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்து கிறது. டீன் ரவிராஜ், மினியேச்சர் மாடல்கள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார். பேராசிரியர்கள் பாலாஜி கண்ணன், அருணா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !