உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிக்கெட் புக் இன்றி கண்டக்டர்கள் திணறல்; பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை

டிக்கெட் புக் இன்றி கண்டக்டர்கள் திணறல்; பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை

பொள்ளாச்சி; அரசு பஸ் கண்டக்டர்களுக்கு டிக்கெட் புக் மற்றும் இ.டி.எம்., எனப்படும் தொடுதிரை மின்னணு டிக்கெட் மெஷின்கள் முறையாக வழங்கப்படுவதில்லை, என, புகார் எழுந்துள்ளது.அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி பணிமனைகளுக்கு உட்பட்ட அரசு பஸ்களில், டிக்கெட் பிரின்ட் செய்யும் பட்டன் அடங்கிய, எலக்ட்ரானிக் டிக்கெட்டிங் மெஷின் (இ.டி.எம்.,) பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் உள்ள மூன்று பணிமனைகளில், 226 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கேற்ப இ.டி.எம்., மெஷின்கள் தருவிக்கப்பட்டுள்ளன. தலைமை அலுவலகத்தில் இருந்து வழக்கமாக அனுப்பப்படும் டிக்கெட் புக், எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.ஆனால், இதுவரை, கண்டக்டர்களுக்கு இ.டி.எம்., மெஷின் முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. மாறாக, பணிமனைக்கு 4 முதல் 5 கண்டக்டர்களுக்கு மட்டுமே இ.டி.எம்., மெஷின் வழங்கப்பட்டுள்ளது.இதனால், மப்சல் பஸ்சில் கண்டக்டர்கள், வழக்கம்போல, டிக்கெட் புக் பயன்படுத்தி, பயணியருக்கு டிக்கெட் வழங்குகின்றனர். அப்போது, ஒரு ஊருக்கு குறிப்பிட்ட தொகையை உள்ளடக்கிய ஒரு சீட்டு வழங்க முடியாமல், இரண்டுக்கும் மேற்பட்ட சீட்டுகளை வழங்கி, குழப்பத்தில் தவிக்கின்றனர்.கண்டக்டர்கள் கூறியதாவது:பணிமனைகளில், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக கண்டக்டர்களே பணியில் உள்ளனர். அவர்களுக்கு, இ.டி.எம்., மெஷினில் உரிய தகவல்களை பதிவேற்றம் செய்யத் தெரியாது என்பதை சுட்டிக் காட்டி, மெஷின் வழங்குவது தவிர்க்கப்படுகிறது.அதேபோல, மாதந்தோறும், ஒவ்வொரு பணிமனைக்கும், பஸ்களுக்கு தேவையான டிக்கெட் புக், மொத்தமாக பெறப்பட்டு வந்தது. இ.டி.எம்., மெஷின் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், டிக்கெட் புக் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.இதனால், ஒவ்வொரு ஊருக்கும் ஒன்று முதல் மூன்று எண்ணிக்கையில் டிக்கெட் வழங்க வேண்டியுள்ளது. உதாரணமாக, பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு 15 ரூபாய் என, பிரின்ட் செய்யப்பட்ட டிக்கெட் வழங்க வேண்டும். தற்போது, 15 ரூபாய் பிரின்ட் செய்யப்பட்ட டிக்கெட் புக் இல்லாததால், 7 ரூபாய் மற்றும் 8 ரூபாய் என, இரு டிக்கெட் வழங்க வேண்டியுள்ளது.இதேபோல, ஒவ்வொரு ஊருக்கும் 2 முதல் நான்கு டிக்கெட் வரை வழங்க வேண்டியுள்ளது. எனவே, பணிமனைகளில் அலுவலக பணியாளர்களை, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியமர்த்தி, இ.டி.எம்., மெஷின் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை