மேலும் செய்திகள்
ஏமாற்றும் நபர்களை உள்ளூர் மக்கள் நம்ப வேண்டாம்!
23-Sep-2025
சூலுார்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டட தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சூலுார் அடுத்துள்ள ஒரு கிராமத்தில் பள்ளி கட்டுமான பணி நடக்கிறது. வெளி மாவட்டங்களை சேர்ந்த பல தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அதே பள்ளியில், 11 ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, கட்டட தொழிலாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அம்மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், சூலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். பள்ளியில் கட்டட வேலை செய்து வந்த அரியலுாரை சேர்ந்த சிலம்பரசனிடம் விசாரணை செய்தனர். அதில் புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிலம்பரசனை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
23-Sep-2025