உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொடரும் விபத்துகள்; கட்டுப்படுத்த என்ன வழி? தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கவனம் செலுத்தணும்

தொடரும் விபத்துகள்; கட்டுப்படுத்த என்ன வழி? தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கவனம் செலுத்தணும்

கிணத்துக்கடவு; பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர். பொள்ளாச்சி --- கோவை ரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விரைவாக பயணிக்கவும், 26.8 கி.மீ., தொலைவுக்கு நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், முக்கிய இடங்களில் மேம்பாலங்களும், சர்வீஸ் ரோடுகளும் அமைக்கப்பட்டது. இத்துடன் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் திரும்பி செல்லும் வகையில் ஆங்காங்கே 'யு டேர்ன்' வசதி ஏற்படுத்தி சிக்னல்கள் பொருத்தப்பட்டது. ஆனால், ஒரு சில பகுதிகளில் மட்டும் விபத்து தொடர்ந்து நடக்கிறது. இதனால் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு காயங்கள், உயிரிழப்பு, வாகன சேதம் ஏற்படுகிறது. இந்தாண்டு, ஜனவரி முதல் ஜூலை 24ம் தேதி வரை கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும், 35 வாகன விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 34 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது; 13 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்துகள் அனைத்தும், 'யு டேர்ன்' பகுதியில் கவனிக்காமல் திரும்புதல், அதிக வேகமாக வாகனத்தை இயக்குதல், 'ஒன் வே'யில் பயணம், உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்பட்டுள்ளது. இதில், கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூர் அருகே, சர்வீஸ் ரோடு இருக்கையில், மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 'யு டேர்ன்' வசதி உள்ளது. இதனால், அங்கு விபத்து ஏற்படுகிறது. விபத்து தவிர்க்க, 'யு டேர்ன்' பகுதியை அந்த இடத்தில் அடைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், ஒரு சில இடங்களில் மட்டுமே 'யு டேர்ன்' பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சேதமடைந்த தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களுக்கு செல்லும் முக்கிய இடங்களில் 'யு டேர்ன்' வசதிகள் இல்லாததால் டவுன் பஸ்களும் 'ஒன் வே'யில் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, சேதமடைந்த குறுகலான சர்வீஸ் ரோட்டில் இரு வழி பயணம் செய்தல், சிக்னல் வேலை செய்யாமை உள்ளிட்ட காரணங்களால் விபத்துக்கள் நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் உள்ள இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டால், விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்கின்றனர் வாகன ஓட்டுநர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை