கொப்பரை ஏலம் வரும் 2ல் துவக்கம்
கிணத்துக்கடவு: வடக்கிபாளையம் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஏப்., 2ம் தேதி முதல் கொப்பரை ஏலம் துவங்கப்பட உள்ளது.கிணத்துக்கடவு விற்பனை கூட கட்டுப்பாட்டில் உள்ள, வடக்கிபாளையம் துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஏப்., 2ம் தேதி முதல், வாரம் தோறும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடை பெற உள்ளது.கொப்பரை ஏலத்துக்கு வரும் விவசாயிகள், ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் மற்றும் மொபைல் போன் எண் வழங்க வேண்டும். 'இ - நாம்' திட்டத்தின் வாயிலாக, ஏலம் நடக்க இருப்பதால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும்.விற்பனையாகும் விளை பொருளுக்கு, விவசாயிகள் வங்கி கணக்கில் உடனடியாக பணம் வரவு வைக்கப்படும். மேலும், விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இத்தகவலை, கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன், கிணத்துக்கடவு விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் வேளாண் உதவி அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.