உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நெகமத்தில் இன்று கொப்பரை ஏலம்

நெகமத்தில் இன்று கொப்பரை ஏலம்

நெகமம்; நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று முதல் வாரம் தோறும் வியாழக்கிழமை கொப்பரை ஏலம் நடக்கிறது. நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வாயிலாக விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்கின்றனர். விற்பனை கூடத்தில் இன்று முதல் (9ம் தேதி) வாரம் தோறும் வியாழக் கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரை மறைமுக ஏலம் நடக்கிறது. இந்த ஏலத்தில், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. எனவே தேங்காய் மற்றும் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், அவற்றை தரம் பிரித்து வியாழக்கிழமை, காலை 9:00 மணிக்குள், நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டுவர வேண்டும். வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்குரிய தொகை உடனடியாக வழங்கப் படும். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். விவசாயிகள் ஆதார் கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் ஆகியவற்றை விற்பனை கூட அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தகவலை விற் பனை கூட கண்காணிப் பாளர் ஜெயராம கிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை