உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.2.81 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ரூ.2.81 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

நெகமம்; நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 2.81 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது. நெகமம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரம் தோறும் கொப்பரை ஏலம் நடக்கிறது. இந்த வாரம் நடந்த கொப்பரை ஏலத்தில், 47 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. ஏலத்தில், ஒரு கிலோ கொப்பரை அதிகபட்ச விலையாக 226.35 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக, 181.19 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 2 லட்சத்து 81 ஆயிரத்து 756 ரூபாய்க்கு கொப்பரை விற்பனையானது. இதில், 23 விவசாயிகள் மற்றும் 7 வியாபாரிகள் பயனடைந்தார்கள். மேலும், நெகமம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை விற்பனை கூடத்தின் வாயிலாக விற்பனை செய்து பயன்பெறலாம் என, கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை