உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ. 42.65 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ. 42.65 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

நெகமம்; நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 42 லட்சத்து 64 ஆயிரத்து 900 ரூபாய்க்கு கொப்பரை விற்பனை ஆனது.நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் பலர் தங்கள் விளைபொருட்களை இருப்பு வைத்து, மார்க்கெட்டில் விலை ஏற்றத்தின் போது விற்பனை செய்து வருகின்றனர். இதில், அதிக அளவு தேங்காய் மற்றும் கொப்பரையை இருப்பு வைத்து விற்பனை செய்கின்றனர்.தற்போது, விற்பனை கூடத்தில், முதல் தர கொப்பரை, 132 முதல் 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் தர கொப்பரை, 67 முதல் 102 ரூபாய்க்கு விற்பனையானது.மேலும், 50 கிலோ எடை கொண்ட, 1,189 மூட்டை கொப்பரை, 42 லட்சத்து 64 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், 13 விவசாயிகள் மற்றும் 4 வியாபாரிகள் பயனடைந்தனர். இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !