மேலும் செய்திகள்
தீபாவளி போனஸ் கேட்டு ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
16-Oct-2024
கோவை : கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான போனஸ் பேச்சு, வரும் 21க்கு ஒத்திவைக்கப்பட்டது.கோவை மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் துாய்மை பணியாளர்கள், லாரி டிரைவர்கள், கிளீனர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்க வேண்டும்; 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவோரை நிரந்தரம் செய்ய வேண்டும்; தீபாவளிக்கு ஒரு மாத போனஸ் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள், நீண்ட நாட்களாக வலியுறுத்தப்படுகின்றன.இவற்றை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் சங்கங்களின் கூட்டமைப்பினர், தீபாவளிக்கு மறுநாள் நவ., 1 முதல் வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக, மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது.மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பேச்சு நடத்தப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் சிவக்குமார், நகர் நல அலுவலர் (பொ) பூபதி, ஒப்பந்த நிறுவனம் தரப்பில் பொறுப்பாளர் ஸ்டேன்லி ஆகியோர் பங்கேற்றனர். தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஸ்டாலின் பிரபு, கோதண்டன், ஜோதி, ஆறுமுகம், காய்த்ரி மற்றும் மற்ற தொழிற்சங்கங்கள் சார்பில் செல்வராஜ், செல்வம் உட்பட, 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.ஒப்பந்த நிறுவனத்தினர் தரப்பில், 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், ஒரு நபருக்கு ரூ.2,500 மட்டும் போனஸ் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதை தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை. அதன்பின், 3,000 ரூபாய் தருவதாக கூறப்பட்டது. கடந்தாண்டு, 3,750 ரூபாய் வழங்கப்பட்டது; அதை விட குறைவாக கொடுப்பது எவ்விதத்தில் நியாயம் என, தொழிற்சங்கத்தினர் கேள்வி கேட்டனர். அதனால், 4,000 ரூபாய் தருவதாக ஒப்பந்த நிறுவனத்தினர் கூறியுள்ளனர். அதை ஏற்காத தொழிற்சங்கத்தினர், ஒரு மாத போனஸ் வழங்க வேண்டுமென கூறினர். அதனால், அடுத்த கட்ட பேச்சு, அக்., 21க்கு ஒத்திவைக்கப்பட்டது.பேச்சுவார்த்தை துவங்கி விட்டதால், வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென, மாநகராட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. போனஸ் வழங்குவது உட்பட மற்ற கோரிக்கைகளை ஏற்பது தொடர்பாக பேச்சில் என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பதை அறிந்தபின், போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என, தொழிற்சங்க நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
16-Oct-2024