உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

கோவை; கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், செவ்வாய்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடக்கும் அக்கூட்டத்தில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்த தேவைகள், குறைகளை மக்கள் மனுக்களாக அளித்தனர். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் காரணமாக, ஆறு வாரங்களுக்கு மேலாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இன்று, வடக்கு மண்டலம், 11, 21வது வார்டு மக்களுக்கு சரவணம்பட்டி எஸ்.ஆர்.பி. மில், குளோபஸ் நிலையத்தில் அம்முகாம் நடப்பதால், மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை