போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
கோவை: கோவையில் மண்டல அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதில், வடவள்ளி (தெற்கு) மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த ரோகன் என்ற மாணவர், 40 கிலோ எடைப்பிரிவு தொடு முறை சண்டையில் தங்கப்பதக்கம், ஷம்ரீஸ் என்ற மாணவர் 14 வயதுக்கு உட்பட்ட சிலம்பம் ஒற்றை கம்பு சுற்றும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். வடவள்ளி (வடக்கு) மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த பவதாரிணி, ஒற்றை கம்பு சுற்றும் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இரட்டை கம்பு சுற்றும் பிரிவில் மோனிஷா வெள்ளி பதக்கம், 40 கிலோ எடை பிரிவு தொடு முறை சண்டையில் ரஞ்சித் குமார் வெண்கல பதக்கம், 35 கிலோ எடை பிரிவு தொடு முறை சண்டையில் ஹரிசா வெண்கலப் பதக்கம் வென்றனர். பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர் மாநகராட்சி கமிஷ்னர் சிவகுரு பிரபாகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.