உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜூடோ போட்டியில் பதக்கம் குவித்த மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்

ஜூடோ போட்டியில் பதக்கம் குவித்த மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்

கோவை; கோவை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் ஆரம்பப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, 148 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் கல்விக்கு மட்டுமின்றி, கல்வி சாரா செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்பட்டுத்தும் விதமாக ஜூடோ, கராத்தே, சிலம்பம், டேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மண்டல அளவிலான முதல்வர் கோப்பை ஜூடோ போட்டி திருப்பூரில் இரு நாட்கள் நடந்தது. இதில், அனுப்பர்பாளை யம் மாநகராட்சி உயர்நிலை பள்ளியின், 9ம் வகுப்பு மாணவர் முபாரிஸ்(66 கிலோ எடை பிரிவு) தங்க பதக்கமும், கோட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் முகமது நோபிள்(55 கிலோ எடை பிரிவு) வெண்கல பதக்கம் வென்றுள்ளார். ஒப்பணக்கார வீதி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின், 11ம் வகுப்பு மாணவர் அப்ஸனா(70 கிலோ எடைப்பிரிவு), மாணவியர் சுல்தானா பேகம்(63) ஆகியோர் வெள்ளி பதக்கமும், ஹரிவர்ஷா(48) வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான ஜூடோ சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில், அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியின், 9ம் வகுப்பு மாணவர் அருண்குமார்(40) வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி