உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மளிகை கடைகளில் காஸ்மெடிக் விற்பனை

மளிகை கடைகளில் காஸ்மெடிக் விற்பனை

பொள்ளாச்சி; மளிகை கடைகளில் விற்பனை செய்யப்படும் அழகு சாதனைப் பொருட்கள், உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.மருந்து மற்றும் காஸ்மெடிக்ஸ் சட்டப்படி, தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்களுக்கு உரிமம் பெற வேண்டும். இதேபோல், பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, பதிவு சான்று கட்டாயமாகும். குறிப்பாக, பி.ஐ.எஸ்., விதிமுறையை நிறைவு செய்யும் இவ்வகை தயாரிப்புகள் இருத்தல் வேண்டும்.ஆனால், பொள்ளாச்சி நகரில், சில கடைகளில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் தரமற்று இருப்பதாக, புகார் எழுகிறது. மளிகைக்கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர், பெட்டிக்கடை என, அனைத்து விதமான கடைகளிலும், இத்தகைய காஸ்மெடிக் விற்பனை அதிகரித்துள்ளது.இப்பொருட்களைப் பயன்படுத்தினால், எதிர்வினை புரிந்து கூடுதல் பாதிப்பு ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.தன்னார்வலர்கள் கூறுகையில், 'அழகு சாதன பொருட்களை வாங்குவோர் அதனை பயன்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர். தரம் குறித்து தெரிந்து கொள்வதில்லை.உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா, பிராண்டுகளில் போலியான, கலப்படம் நிறைந்த, அங்கீகரிக்கப்படாத அழகு சாதனப் பொருட்கள் உள்ளதாக என்பதை கண்டறிய துறை ரீதியான அதிகாரிகள் ஆய்வு அவசியம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ