மேலும் செய்திகள்
மின்னல் தாக்கி தென்னை மரம் எரிந்து சேதம்
14-Oct-2026
கட்டடத்தின் மீது சாய்ந்த மரம் வெட்டி அகற்றம்
22-Oct-2026
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்து தீப்பிடித்ததில், வீட்டில் இருந்த தம்பதியினர் உயிர் தப்பினர். மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை கரட்டுமேட்டை சேர்ந்தவர் முருகன், 65. அவரது மனைவி லட்சுமி, 60. இத்தம்பதியர் நேற்று முன் தினம் இரவு பெய்த மழையின் போது வீட்டிற்குள் அமர்ந்திருந்தனர். வீட்டருகே இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்து, மரம் எரிந்தது. வீட்டுக்குள்ளேயே இடி விழுந்தது போல ஒட்டுமொத்த வீடும் அதிர்ந்ததால், தம்பதியர் வீட்டை விட்டு வெளியேறினர். மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் அனில்குமார் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் தென்னை மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
14-Oct-2026
22-Oct-2026