உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்வு

கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்வு

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின்(சி.டி.சி.ஏ.,), 67வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில், 2025-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, தலைவராக லட்சுமிநாராயணசாமி மற்றும் துணை தலைவர்களாக குருசாமி, சுந்தர் ராமகிருஷ்ணன், நாராயணன், திருப்பதிமூர்த்தி, தினேஷ் ஆகியோரும், செயலாளராக சந்திரமவுளி, இணை செயலாளர்களாக சுரேஷ்குமார், மகாலிங்கம், பொருளாளராக சவுந்தரராஜன், 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !