கிரிக்கெட் லீக் நுழைவு போட்டி; வரும் 24க்குள் விண்ணப்பிக்கணும்
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடக்கும், 'லீக்' நுழைவு போட்டிக்கு வரும், 24ம் தேதி வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'லீக்' போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கென, ஒவ்வொரு ஆண்டும் நுழைவு போட்டி நடத்தப்பட்டு, அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், தேர்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில், சி.ஆர்.ஐ., கோப்பைக்கான லீக் நுழைவு போட்டி, ஜன., மாதம் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகளுக்கான விண்ணப்பங்கள், நேற்று முதல் நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் உள்ள, மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகின்றன. வரும், 24ம் தேதி மதியம், 1:00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 97877 40390 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.