உள்ளூர் செய்திகள்

கிரிக்கெட் போட்டி

- நமது நிருபர் -மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன், சர்ப் எக்ஸல் சார்பில், பள்ளி அணிகளுக்கு இடையேயான, ஜூனியர் சூப்பர் கிங்ஸ் இன்டர் ஸ்கூல் டி - 20 சாம்பியன்ஷிப் போட்டி திருப்பூரில் நடத்தப்படுகிறது.மாணவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.வரும், 26, 27 ம் தேதி, அவிநாசி, பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் மாநிலம் முழுதும் மட்டுமின்றி, ஆந்திரா, கோவா, கர்நாடக மாநிலங்களில் செயல்படும் பள்ளி அணிகள் உட்பட, 15க்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.பள்ளிக் குழந்தைகளின் தங்கள் கிரிக்கெட் திறமையை வளர்த்துக் கொள்ள நடக்கும் இப்போட்டியின் விபரங்களை, 9344207615 என்ற மொபைல் எண்ணில் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை