உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

ரூ.500 வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செல்வபுரம்: பொள்ளாச்சியை சேர்ந்த அங்குராஜ், சொக்கம்புதுாரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த நபர் பாக்கெட்டில் இருந்த ரூ.500ஐ பறித்து தப்பினார். புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் விசாரித்தனர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார், 27 எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். பெண்களிடம் தகராறு செய்தவருக்கு சிறை புலியகுளம்: ஏரிமேட்டை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 24. நேற்று முன்தினம் இரவு இவரது தாயார், வீட்டின் பின்புறம் சென்ற போது ஒருவர் நின்றிருந்தார். இதுகுறித்து முத்துலட்சுமியிடம் கூறினார். அந்நபர் அவர்களை மிரட்டியதால் வீட்டினுள் வந்தனர். அந்நபர் தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்தார். அருகிலிருந்தவர்கள் பிடித்து ராமநாதபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், 31 எனத் தெரிந்து சிறையிலடைக்கப்பட்டார். மழையின் காரணமாக விபத்தில் ஒருவர் பலி கதிர்நாயக்கன்பாளையம் : தொப்பம்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 54. மொபட்டில் செல்லும் போது மழையின் காரணமாக விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். புகையிலைப் பொருட்கள் கடத்திய இருவர் கைது சாய்பாபா காலனி: வெங்கிடாபுரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த இருவர் புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் பி.என்.பாளையம் பிரவீன், 25, வெங்கிடாபுரம் அசாரூதீன், 37 என்பதும் கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்ததும் தெரிந்தது. கைது செய்த போலீசார் நீதிமன்ற பிணையில் விடுவித்தனர். 80 கிலோ புகையிலைப் பொருட்கள், ரூ.2170 பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை