உள்ளூர் செய்திகள்

சங்கிலி பறிப்பு

திருப்பூரை சேர்ந்த சஞ்சய், 22; கோவை தனியார் மருத்துவ கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். பீளமேடு எல்லைத்தோட்டம் பகுதியில், காலை 9:30 மணியளவில் நடந்து சென்றபோது டூவீலரில் வந்த மூவர் வழிமறித்தனர். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 110 கிராம் வெள்ளி சங்கிலி மற்றும் வெள்ளி இடுப்பு கயிற்றை பறித்து தப்பினர். புகாரில் பேரில் பீளமேடு போலீசார் சி.சி.டி.வி., ஆதாரங்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர். கஞ்சா விற்பனை *ராமநாதபுரம் போலீசார் ரோந்து பணியின் போது, சுங்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பரத்காந்தி, 31 என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து, 210 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. *மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ராமநாதபுரம் சண்முகா நகரில் கஞ்சா விற்ற கணபதி கவுதம், 25 என்பவரை கைது செய்து 1.500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். * ரத்தினபுரி போலீசார் நாராயணசாமி லே அவுட் பகுதியில் கஞ்சா விற்ற பீகாரை சேர்ந்த ராம் ரத்தன் ராம், 27 என்பவரை கைது செய்தனர். 3.500 கிராம் கஞ்சா, 700 ரூபாய், எடை இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !