உள்ளூர் செய்திகள்

சாட்சிக்கு மிரட்டல்

கணபதியை சேர்ந்த பாண்டி, நல்லாம்பாளையம் ரோட்டில் மளிகைக்கடை வைத்துள்ளார். கடையில் இருந்தபோது, உப்பிலிபாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் தன் மீதுள்ள வழக்கிற்காக வக்கீலுக்கு கட்டணம் செலுத்த பணம் கேட்டு மிரட்டினார். பணம் தரமறுத்ததால், வழக்கில் சாட்சி கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டி சென்றார். புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.கொள்ளை முயற்சி பீளமேடு கருப்பராயன்பாளையத்தில் அதிகாலையில் வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைய முயன்றனர். வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு விளக்கை போட்டதும் தப்பி ஓடினர். வீட்டின் உரிமையாளர் தர்மபிரபு, 42 போலீசில் தெரிவித்துள்ளார். சி.சி.டி.வி., பதிவுகளை ஆராய்ந்து போலீசார் விசாரிக்கின்றனர். வீடு புகுந்து திருட்டு சரவணம்பட்டி இளங்கோ நகர் சுப்ரமணி, 38 குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மனைவியுடன் வேலைக்கு சென்றுள்ளார். மதிய நேரம், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க, வெள்ளி நகைகள், இரண்டு மொபைல் திருடுபோனது. இதன் மதிப்பு, 10.26 லட்சம் ரூபாய். சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். புகையிலை பொருட்கள் பறிமுதல் ஆர்.எஸ்.புரம்: பி.என்.புதுார் பகுதியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அன்னபூரணி, 56 என்பவரை ரோந்து சென்று ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர். கஞ்சா சாக்லெட் பறிமுதல் சிங்காநல்லுார் பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த பீகார் பவன் குமார், 24 என்பவரை ரோந்து சென்ற போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் 500 கிராம் கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் நெட்வொர்க் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !