கிரைம் செய்திகள்
மூதாட்டியை மீட்ட போலீசார்
கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் சாந்தி, 60. இவர் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். சாமி தரிசனம் முடிந்து கோவிலுக்கு அருகில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது அவர் பவானி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று தற்கொலைக்கு முயன்றார்.இதனை அங்கு ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ., ராஜன் மற்றும் அவரது தலைமையிலான லைப் காட்ஸ் குழுவினர் பார்த்தனர். உடனடியாக ஆற்றில் குதித்து மூதாட்டியை உயிருடன் மீட்டு கரைக்கு பரிசலில் கொண்டு வந்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.---2.5 டன் ராடு திருடியவர்களுக்கு சிறை சூலூர் அடுத்த சங்கோதிபாளையம் பகுதியில் தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலை உள்ளது. இங்கு சண்முகவேல் ராஜ்,41. உதிரிபாகங்கள் பிரிவின் பொறுப்பாளராக உள்ளார். சம்பவத்தன்று, கம்பெனிக்கு இரும்பு ராடுகள் லாரியில் வந்துள்ளன. தொழிலாளர்களான குமரேசன், சந்தோஷ்குமாரிடம் ராடுகளை இறக்கி வைக்க கூறி சாப்பிட சென்றார்.
அப்போது, அவர்கள் இருவரும், 2.5 டன் ராடுகளுடன் லாரியை திருடி சென்றுவிட்டனர். அவர்களை தேடியபோது, கணியூர் டோல்கேட் அருகில் லாரி நிற்பது அறிந்து அங்கு சென்று அவர்களை பிடித்து சூலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.