மேலும் செய்திகள்
இலவச தொழில் பயிற்சி; மாணவர்கள் பங்கேற்கலாம்
23-Apr-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பாலமந்திர் பண்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடந்தன.இம்முகாமில், குழந்தைகளுக்கான நல்ல இயல்புகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. தேசப்பற்று, நல்லொழுக்கம், பெற்றோரை மதித்தல், மன ஒருமைப்பாட்டுக்கான பயிற்சிகள், உடல் உறுதிக்கான யோகாசனம் மற்றும் விளையாட்டுக்கள், தேசபக்தி பாடல்கள், நம் நாட்டின் பாரம்பரிய விழுமியங்கள் உள்ளிட்டவை கற்றுக் கொடுக்கப்பட்டன. முகாம் நிறைவு நாளில், வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகுத்து, குழந்தைகளின் திறமைகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் தங்கமணி முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
23-Apr-2025