உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கறிவேப்பிலை விலையேற்றம்

 கறிவேப்பிலை விலையேற்றம்

மேட்டுப்பாளையம்: காரமடை மற்றும் சுற்றுப்பகுதிகளில் விளையும், செங்காம்பு கறிவேப்பிலை முதல் தரமானதாகும். ஆந்திரா, சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆகிய இடங்களில் இருந்து, கறிவேப்பிலை கோவை, கேரளாவுக்கு கொண்டு வருவதால், காரமடை கறிவேப்பிலைக்கு விலை குறைவாக கிடைத்தது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ குறைந்தபட்சம், 35க்கும், அதிகபட்சம் 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த வாரம் ஆந்திராவில் புயல் தாக்கியதால், கறிவேப்பிலை விவசாயம் பாதிப்படைந்தது. அதனால் காரமடை கறிவேப்பிலை விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ குறைந்தபட்சம், 55 ரூபாய்க்கும், அதிகபட்சம், 60 ரூபாய்க்கும் அறுவடை செய்யப்படுகிறது. முதல் தரமான கறிவேப்பிலை கொச்சியிலிருந்து விமானத்தின் வழியாக தினமும், 10 டன் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பனிக்காலம் துவங்க இருப்பதால், மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ