உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொள்ளையருக்கு வலை; தனிப்படை தீவிரம்

கொள்ளையருக்கு வலை; தனிப்படை தீவிரம்

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை அன்னை வேளாங்கண்ணி நகரில் மரக்கடை உரிமையாளரின் வீட்டில், கடந்த ஏப்ரல் மாதம், 20 சவரன் தங்க நகை திருடு போனது.அதே போல் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடையில் உள்ள வேறு இரண்டு வீடுகளில், மொத்தம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளை போனது.இச்சம்பவங்கள் குறித்து மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை போலீசார் சார்பில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.போலீசார் கூறுகையில், ''கொள்ளையர்களை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் பிடித்து விடுவோம்,'' என்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை