பெஞ்சல் புயல் நிவாரணம்; நிதி திரட்டிய கல்லுாரி மாணவர்கள்
கோவை; தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய பெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்கு கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் நிவாரணம் திரட்டி, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர்.ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து நிவாரண பணிக்காக, 1.50 லட்சம் நிதி திரட்டினர். கல்லுாரி அரங்கில் நடந்த நிகழ்வில், நிவாரண நிதிக்கான காசோலையை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் துணை முதல்வரிடம் வழங்கினார்.இந்நிகழ்வில், அறக்கட்டளை தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், கல்லுாரி முதல்வர் சிவக்குமார், மாணவ பேரவைத் தலைவர் சித்தார்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.