உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓதுவாருக்கு பொற்பதக்க விருது வழங்கியது தருமை ஆதீனம்

ஓதுவாருக்கு பொற்பதக்க விருது வழங்கியது தருமை ஆதீனம்

கோவை ; கோவையிலுள்ள பேட்டை விஸ்வேஸ்வரசாமி கோவில் தேவார பாடசாலை ஓதுவார் கண்ணப்பநாயனாருக்கு திருமுறை கலாநிதி என்ற பொற் பதக்க விருது வழங்கி கவுரவித்துள்ளது தருமை ஆதீனம். தருமை ஆதீனத்துக்கு சொந்தமான திருகற்குடி உய்யக்கொண்டான்மலை, ஸ்ரீ உஜ்ஜீவநாத சுவாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேகப் பெருவிழா நேற்று நடந்தது.இதில் தருமைஆதீனம், 27 ஆவது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக சுவாமிகள், கோவை விஸ்வேஸ்வரசுவாமி கோவில் தேவார பாடசாலை ஓதுவாமூர்த்தி கண்ணப்பநாயனாருக்கு, திருமுறைக் கலாநிதி என்ற பொற்பதக்க விருது வழங்கி நேற்று கவுரவித்தார். இந்த விருதில் ஒரு பவுன் தங்க டாலர், பணமுடிப்பு மற்றும் தருமை ஆதீனத்தின் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறையை சிறப்பாக பாடுவதோடு, இளைய தலைமுறையினருக்கு தேவார பாடசாலை வாயிலாக பயிற்சி அளித்ததற்காக இவ்விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இது தமிழுக்கும் கோவைக்கும் கிடைத்த பெருமையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி