உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கரா கல்லுாரியில் நடந்த காது கேளாதோர் கிரிக்கெட்

சங்கரா கல்லுாரியில் நடந்த காது கேளாதோர் கிரிக்கெட்

கோவை; கோவை சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் நடந்த, காது கேளாதோர் கிரிக்கெட் போட்டியில் சென்னையை சேர்ந்த அணி வெற்றி பெற்றது.கோவையில், 'டெப் லீடர்ஸ் பவுண்டேஷன்' சார்பில், மகளிர் தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அளவிலான மண்டல மகளிர் கிரிக்கெட் போட்டி நடந்தது.சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி இணைந்து நடத்தியது. சரவணம்பட்டியில் உள்ள இக்கல்லுாரியில் நடந்த போட்டியில் சென்னை, சேலம், கோவையை சேர்ந்த காது கேளாதோர் மகளிர் அணிகள் பங்கேற்றன.துவக்க விழாவில், கல்லூரி முதல்வர் ராதிகா, ஸ்வர்தர்மா பவுண்டேஷன் கோவை நிறுவனர் அருணா, கோயம்புத்தூர் வடக்கு ரவுண்ட் டேபிள் 20 தலைவர் அருண் குணசேகரன், கோயம்புத்தூர் லேடீஸ் சர்க்கிள் 11 தலைவர் சிவகாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நான்கு சுற்றுக்களாக நடந்த இந்த போட்டியில், சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் வசந்தராமன், கல்லூரி முதல்வர் ராதிகா, காக்னிஜென்ட் டெக்னாலஜிஸ் டார்வின் மோசஸ், இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்கத்தின், செயல் உறுப்பினர் சுப்புராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ