முருங்கை வரத்து சரிவு
- நமது நிருபர் --சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறிகளில் ஒன்றாக முருங்கைக்காயும் ஒன்று. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையம் வாயிலாக, சென்னை, கோவை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.கடந்த வாரம், ஒரு டன் வந்தது. கிலோ, 41 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றுமுன்தினம், 500 கிலோ வந்தது. கரும்பு, செடி மற்றும் மர முருங்கை, 65 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ள கோவிலுக்கு வழக்கத்தை விட முருங்கை வரத்து சரிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.