பொது அறிவை வளர்க்கும் பட்டம் இதழ்: கமிஷனர்
விருது வழங்கும் விழாவில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், '' மாநகராட்சி பள்ளிகளுக்காக பிரத்யேகமாக போட்டி நடத்தி பரிசளிப்பது, வரவேற்கத்தக்கது. பட்டம் இதழில், தமிழ், வரலாறு, பொது அறிவு தகவல்கள் நிறைய உள்ளன. பாடப்புத்தகங்களோடு, பட்டம் இதழ் வாசிப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். இதை ஊக்குவிக்கும் விதமாக, போட்டிகள் நடத்தி, ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில், பரிசுகள் வழங்கும் 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. இதை தொடர்ந்து நடத்த வேண்டும்,'' என்றார்.