டில்லி குண்டுவெடிப்பு; கோவையில் கண்காணிப்பு
கோவை: டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கோவை ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனங்களில் சோதனை நடத்தினர். கோவையில் இருந்து கேரளாவுக்கு சென்ற வாகனங்கள், கோவைக்கு வந்த வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. கோவை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும், தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டன. மாநகர போலீசார் மாநகரின், 52 இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு, வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். வெளிமாநில பதிவெண் கொண்டவாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.