மேலும் செய்திகள்
சுங்கச்சாவடிகளில் இலவசம் த.வெ.க., மாநாடு துளிகள்
28-Oct-2024
வால்பாறை; வனத்துறை சோதனைச்சாவடியில் நுழைவுக்கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என, கார், வேன் அசோசியேஷன் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.வால்பாறை செவண்த் ெஹவென் வேன் மற்றும் கார் அசோசியேஷன் சார்பில், நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு சட்ட ஆலோசகர் விஸ்வநாதன், செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், வால்பாறையில் உள்ள வாகனங்களுக்கு சக்தி தலனார் செல்லும் வழியில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் நுழைவுக்கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா பயணியர் நலன் கருதி, சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், சங்க பொருளாளர் ஜான்சன், துணைத்தலைவர்கள் பாபு, ஜெயக்குமார், ஒருங்கிணைப்பாளர் மதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
28-Oct-2024