கோரிக்கைகளை வலியுறுத்திகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கோவை, : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின், கோவை மண்டலம் சார்பில், வரும் 15ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.ஓய்வு பெற்ற நாளன்றே அனைத்து பணப்பயன்களையும் முழுமையாக வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை, தமிழக அரசே பொறுப்பேற்று வழங்கும் என்ற உத்தரவாதத்துடன் முத்தரப்பு ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், வரும் 15ம் தேதி, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.கோவை மண்டலம் சார்பில், கோவை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.