உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொகுதியின் வளர்ச்சியே முக்கியம் பாலக்காடு பா.ஜ., வேட்பாளர் உறுதி

தொகுதியின் வளர்ச்சியே முக்கியம் பாலக்காடு பா.ஜ., வேட்பாளர் உறுதி

பாலக்காடு: பாலக்காடு சட்டசபை தொகுதியில், தேர்தல் பிரசாரத்தில் முக்கியமாக விவாதிப்பது வளர்ச்சி தான் என பா.ஜ., வேட்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காடு காங்., எம்.எல்.ஏ., ஷாபி பரம்பில், லோக்சபா தேர்தலில் வடகரை தொகுதி எம்.பி.,யானார். இதையடுத்து, நவ., 20ம் தேதி பாலக்காடு சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார்.நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பாலக்காடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் முக்கியமாக விவாதிப்பது தொகுதியின் வளர்ச்சி தான். பாலக்காடு நகராட்சியில், பா.ஜ. ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டு வரும், வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டு, மக்களிடம் ஓட்டு கேட்கிறேன்.காங்., மற்றும் மா.கம்யூ. கட்சியினர் மாறி மாறி பாலக்காடு தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருந்தும், குடிநீர் பிரச்னைக்கு கூட தீர்வு காணவில்லை.ஆனால், பாலக்காடு நகராட்சியில், 24 மணி நேரமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர், பிராயிரி, கண்ணாடி ஊராட்சிகளில் மக்கள் குடிநீருக்காக திண்டாடுகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்றால், முதலில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் செலுத்துவேன்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ