உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அம்மன் கோவில்களில் திரண்ட பக்தர்கள்

அம்மன் கோவில்களில் திரண்ட பக்தர்கள்

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி வெள்ளியான நேற்று, சுமங்கலிகள்அம்மனை வழிபட்டு தங்களது மாங்கல்யம் நிலைக்கவும், குடும்ப நன்மைக்கும், சுபிட்சத்திற்கும்பிரார்த்தனை மேற்கொண்டனர்.கோவை நகர் மற்றும் புறநகரிலுள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களை தொடர்ந்துசிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு காட்சியருளினார்.பெரியகடைவீதி, கோனியம்மன்,மாகாளியம்மன், அவிநாசி சாலைதண்டு மாரியம்மன், ஆர்.எஸ்.புரம், காமாட்சியம்பாள், அன்னபூர்ணேஸ்வரி, ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில்களில்ஆடி வெள்ளிக்கிழமைசிறப்பு வழிபாடு நடந்தது. கோவில்களில் பச்சரிசி மாவு கோலமிட்டு, மண்டபங்களில் வாழை பாக்கு மரங்கள், மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.கோவில்களில் சுமங்கலி பெண்களுக்கு ரவிக்கை துணி, மஞ்சள் கொம்பு, குங்குமம், கண்ணாடிவளையல்கள், மஞ்சள் சரடு ஆகியவை வழங்கப்பட்டன. சில கோவில்களில் கூழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ