உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்தாரம்மன் தசரா விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்தாரம்மன் தசரா விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோவை; சங்கனுார் - நல்லாம்பாளையம் சாலையில் அமைந்துள்ள, ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயிலில், இந்தாண்டுக்கான தசரா திருவிழா, 22ம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக துவங்கியது. நேற்று முன் தினம் நடைபெற்ற விழாவில், விரதம் இருந்த பக்தர்கள் மாலை அணிந்து, சுவாமி வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். காளி, விநாயகர், அனுமன், அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வீதியுலா சென்றனர். சிலர் ராணுவ வீரர், போலீஸ், குறவன்-குறத்தி போன்ற பிற வேடங்களையும் அணிந்து ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக, அம்மனுக்கு அபிஷேக பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை