உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை பக்தர்கள் வழிபாடு

கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை பக்தர்கள் வழிபாடு

- நிருபர் குழு -: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வரர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உடுமலை உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஐப்பசி அமாவாசை தினமான நேற்று, மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமிகளை தரிசனம் செய்தனர். மேலும், தோணியாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, சுவாமிகளை வழிபட்டனர். ஐந்தாம் நாளாக தடை திருமூர்த்திமலைப்பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த, 17ம் தேதி முதல், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு ள்ளது. ஐந்தாம் நாளான நேற்றும், அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வால்பாறை வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, ஐப்பசி மாத அமாவாசை தினமான நேற்று காலை, 6:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் காலை, 7:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 9:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில், சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில், ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன்கோவில்களில் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி