உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 12.53 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மருந்து

12.53 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மருந்து

கோவை; தேசிய குடற்குழு நீக்க தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில், 12 லட்சத்து, 53 ஆயிரத்து, 842 பேருக்கு குடற்புழு நீக்க மருந்து, மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டது. அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லுாரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில், 'அல்பெண்டாசோல்' என்கிற குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''1-2 வயது பிரிவில், 46,645 குழந்தைகளுக்கும், 2-19 வயது பிரிவில் 9,51,777 பேருக்கும், 20 -30 வயதுடைய பெண்கள் 2,55,420 பேருக்கும் மாத்திரை வழங்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 98.81 சதவீதம் எட்டியுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி