உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் - பட்டம் வினாடி - வினா போட்டி; உடனுக்குடன் பதில் கூறி அசத்திய மாணவர்கள்

தினமலர் - பட்டம் வினாடி - வினா போட்டி; உடனுக்குடன் பதில் கூறி அசத்திய மாணவர்கள்

பொள்ளாச்சி; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டி, பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் முத்துசாமிகவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை, 'பட்டம்' இதழ் தினமும் பள்ளிகளில் கிடைக்கும்.இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை விரிவுப்படுத்தும் வகையிலும், 2018 முதல், மெகா வினாடி -வினா போட்டி நடத்தப்படுகிறது.நடப்பாண்டு, வினாடி -வினா போட்டி, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் முத்துசாமிகவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ - ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி இணைந்து உள்ளது.பள்ளியில், நேற்று நடந்த போட்டியில், 56 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேரை, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது. மூன்று கட்டங்களாக நடந்த இப்போட்டியில், முதல் பரிசை, 'டி' அணியை சேர்ந்த, 7ம் வகுப்பு மாணவியர் ஹரிணி, லக் ஷனா ஜோடி வென்றது.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர் கிரிஜா, பள்ளிப்பொருளாளர் பிரியவீணா, ஒருங்கிணைப்பாளர் உஷா, ஜென்சி, கார்த்திகேயன், சுதீஷ்குமார் ஆகியோர் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும்.

அறிவு பெட்டகம்

பள்ளி முதல்வர் கிரிஜா: பட்டம் நாளிதழ், பண்டைய மற்றும் அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வகையிலான அருமையான பதிவு. ஒவ்வொரு நாடு மட்டுமின்றி, பிற மாநிலங்களின் கலாசாரம், வாழ்வியல் சூழல்களை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.பாட புத்தங்களைத்தாண்டி, அனைத்து துறைகளைச்சார்ந்த தகவல்கள், வரலாறு உள்ளிட்டவைகளை மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்கின்றனர். அனைத்து மாணவர்களும் படிக்கும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் அறிவு பெட்டகமாக விளங்குகிறது.

பொதுஅறிவு களஞ்சியம்

மாணவி ஹரிணி: 'தினமலர்'நாளிதழ் வெளியிடும் 'தினமலர் - பட்டம்' இதழ் வாங்கிப் படித்துக்கொண்டு வருகிறேன். உலகில் நிகழும் அனைத்து தகவல்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடிவதால், பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள முடிகிறது. பட்டம் இதழ் படித்து, வினாடி - வினா இறுதி போட்டியில் வெல்வதை லட்சியமாகக்கொண்டுள்ளேன்.மாணவி லக் ஷனா: 'தினமலர் - பட்டம்' இதழை தினசரி படித்து வருகிறேன். இதில், பொதுஅறிவு சார்ந்த அனைத்து தகவல்கள், முக்கிய கேள்வி பதில்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக, உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் பல அரிய தகவல்களை, இப்போதிருந்தே அறிந்து கொள்ளவும் முடிகிறது. தினமலர் பட்டம் இதழ், பொது அறிவின் களஞ்சியமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ