உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டி

 தினமலர் பட்டம் வினாடி - வினா போட்டி

கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், இந்துஸ்தான் கல்விக் குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி- வினா போட்டியில் பங்கேற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள், திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி: இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் 130 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'எச்' அணியின் கீதபிரியன், மணிகண்டன் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'டி' அணியின் சூர்யா, ராஜதுரை; 'ஏ' அணியின் யுவன்ராஜ், தாமஸ்; 'பி' அணியின் லக் ஷிதா, மிதுனா; 'சி' அணியின் மனிஷா, தேவிகா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தலைமையாசிரியர் குணசேகரன் சான்றிதழ்களை வழங்கினார். பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி: இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'ஏ' அணியின் விஷ்ணு, லிபிகா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'இ' அணியின் ஹர்ஷினி, ஜெயராணி; 'டி' அணியின் லாவண்யா, சர்மதா; 'எப்' அணியின் கார்திகா, அபிலியா; 'பி' அணியின் விஷ்ணு, தர்ஷன் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தலைமையாசிரியை பூங்கோதை சான்றிதழ்களை வழங்கினார். கிருஷ்ணராயபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி: இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 100 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'ஏ' அணியின் மோனிகா ஸ்ரீ, பவின் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'எப்' அணியின் ஷிவானிகா, அப்ரின் பாத்திமா; 'டி' அணியின் மதிஹா, ரோஹன்; 'பி' அணியின் டேனியல் நெசத், கீர்த்திகா; 'சி' அணியின் கவுதம் குமார், வேதலட்சுமி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தலைமையாசிரியர் அரிமுரளி சான்றிதழ்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை